ஆளே இல்லாமல் தனியாக வந்த பைக்: அதிர்ச்சி காணொலி - ரைடர் இல்லாத பைக்
மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி, புல்லட் பைக் ஒன்று ஓட்டுநர் இன்றி தனியாகச் சாலையில் சென்று கொண்டிருந்தது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது. பைக்கை ஓட்டி கொண்டிருந்தவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இருப்பினும், ஓட்டுநர் இல்லாத பைக் சுமார் 300 மீட்டர் தூரம் வரை தனியாக சென்றது. இந்தக் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
Last Updated : Aug 13, 2021, 12:57 PM IST