புத்தசபா - புதன்கிழமை கூட்டம்! - பாவ்நகர்
சந்திப்பு வாழ்க்கையின் முக்கியத் தருணங்களைத் தரவல்லது. அது நிகழும்போதெல்லாம் வாழ்க்கை புதிய பரிணாமத்தில் பயணிக்கத் தொடங்குகிறது. காற்று பூவை சந்திக்கும்போது புதிய உயிருக்கான மகரந்த மாற்றம் நிகழ்கிறது. தேநீர் குவளை உதட்டைத் தொடும்போது புதிய உற்சாகம் ஊற்றெடுக்கிறது. அப்படியொரு சந்திப்பைத்தான் நாம் பார்க்கப் போகிறோம். குஜராத்தின் பவ்நகர் ஷிசு விஹார் பகுதியில் தக்த் சிங் ஜி தலைமையில் கூட்டம் ஒன்று 1939இல் நடைபெற்றது. இக்கூட்டம் 1980ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு புதன்கிழமையும் இடைநிற்றல் இன்றி இன்றுவரை தொடர்கிறது. இதனை குஜராத்திகள் புத்தசபா என்கின்றனர். புத்த சபா என்றால் புதன்கிழமை கூட்டம் என்று பொருள்.