மூத்த தலைவர்களை கழுதையில் ஏற்றிய தொண்டர்கள்! - BSP workers blackened faces of party's Ramji Gautam&Sitaram
பகுஜன் சமாஜ் மூத்தத் தலைவர் சீதாராம், தேசிய ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி கெளதம் ஆகியோர் ஜெய்ப்பூருக்கு சென்றனர். அப்போது இருவரையும் அக்கட்சித் தொண்டர்கள் சுற்றிவளைத்து இருவரின் கழுத்திலும் செருப்பு மாலையை அணிவித்தும், முகங்களிலும் கருப்பு நிற மையை ஊற்றியும், கழுதையில் ஏற்றிஊர்வலமாக அழைத்து சென்றனர். கட்சி விரோத நடவடிக்கைகளில் சீதாராமும், ராம்ஜி கெளதமும் ஈடுபட்டு வந்ததாகவும், அதற்காக இருவரையும் இவ்வாறு செய்ததாக பகுஜன் சமாஜ் தொண்டர்கள் தெரிவித்தனர்.