அசால்ட் பாண்டியின் மகனா இவன்? - நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்! - வைரல் காணொளி
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் பத்து வயது சிறுவன் ஒருவன் தனது நண்பனுடன் சாலையில் வந்துக் கொண்டிருந்தான். சாலையை கடந்து வந்தபோது சாலையின் ஓரத்திலிருந்து லாரி ஒன்று சிறுவன் மீது மோதியுள்ளது. இதில் நிலைத்தடுமாறினாலும், சமயோஜிதமாக யோசித்த சிறுவன் லாரியின் கீழ் படுத்து உயிர் தப்பியுள்ளான். இதில் சிறுவனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காணொலி தற்போது வைரலாகிவருகிறது.