விவசாய முன்னோடி, கறுப்பு அரிசி ராஜா! - உபேந்திரா ராபா
நமக்கெல்லாம் வெள்ளை நிறத்திலான பல்வேறு வகை அரிசிகள் குறித்து தெரியும். உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் கறுப்பு அரிசி குறித்து தெரியுமா? அஸ்ஸாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் வசிக்கும் விவசாயி உபேந்திரா ராபா. இவர் பாரம்பரிய கறுப்பு அரிசி விவசாயத்தில் நிபுணத்துவம் பெற்றவராக உள்ளார். இதற்காக புதிய புதிய நுட்பங்களையும் அவர் உபயோகிக்கிறார்.