பளார்விட்ட எம்.பி.! 'அடிக்கவில்லை செல்லமாகத் தட்டினார்' - மழுப்பும் தொண்டர் - கட்சி தொண்டரை கண்ணத்தில் அறைந்தார்
ஒடிசா மாநிலம் பெர்ஹாம்புரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியின்போது பிஜு ஜனதா தள கட்சியின் எம்.பி. சந்திரசேகர் சஹு, கட்சித் தொண்டரை கன்னத்தில் அறையும் காணொலிக் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. இது தொடர்பாக கட்சித் தொண்டர் சங்க்ரம் சஹு கூறியதாவது, "சந்திரசேகர் என்னை அறையவில்லை, சிறு வயதிலிருந்தே எனக்கு அவரைத் தெரியும். என் கன்னத்தை லேசாகத் தட்டினார். அது அறைவதுபோல் இருந்துள்ளது அவ்வளவுதான்" என்று மழுப்பியுள்ளார்.