சுற்றுச்சூழலை காக்க போராடும் "பிஸ்கட் கப்"
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்த மூவர் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த தீர்வு ஒன்றை உருவாக்கியுள்ளனர். தேநீர் உள்ளிட்டவை அருந்துவதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், பேப்பர் கப்புகளால் ஏற்படும் மக்காக் கழிவுகளை தவிர்க்கும் விதமாக பிஸ்கட் கப் என்ற ஒன்றை இவர்கள் தயாரித்துள்ளனர். இந்தத் தனித்துவமான பிஸ்கட் கப்புகளில் தேநீர் அருந்தியபின், அவற்றையும் நாம் சாப்பிட்டுவிடலாம்.