சிங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய இளைஞர்! - Bihar man jumps inside lion enclosure in Delhi zoo
டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம் அடைக்கப்பட்டிருக்கும் பிரிவின் சுவற்றில் இளைஞர் ஒருவர் குதித்து உள்ளே சென்றுள்ளார். பின்னர் சிங்கத்தை பார்த்த அந்த இளைஞர் சிறிது நேரத்திற்கு அதனுடன் ஏதோ பேசிக் கொண்டிருக்க, கொஞ்ச நேரம் பொறுத்திருந்த சிங்கம், பின்னர் அவரை நோக்கி செல்லத் தொடங்கியது. இதனால் பின்னோக்கி அந்த இளைஞர் சென்றார். இந்த காட்சிகளால் அதிர்ச்சியடைந்த உயிரியல் பூங்கா காவலர்கள், அவரை பாதுகாப்பாக சிங்கத்திடம் இருந்து மீட்டெடுத்தனர். உயிரை பணயம் வைத்து சிங்கத்திடம் நெருங்கிச் சென்ற இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது.
TAGGED:
man jumped into inside zoo