'பூட்' பேய் கிராமம்! - பயமுறுத்தும் கதையல்ல
நாம் அனைவரும் சில நேரங்களில் பேய் கதைகளைக் கேட்டிருக்கிறோம். நாங்களும் தற்போது ஒரு பேய் கதையைக் கூறப்போகிறோம். பயப்பட வேண்டாம், இது பயமுறுத்தும் கதையல்ல. மாறாக ஒரு பூட் என்ற கிராமத்தைப் பற்றியது. இது ஜார்கண்டின் குந்தி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு முண்டா என்ற சமூக மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இம்மக்களை புன்ஹாட்டு என்றும் அழைக்கின்றனர். இதன் பொருள் அறிந்தவர்கள் இங்கு வர பயம் கொள்கிறார்கள். ஏனெனில் இது பேயின் பெயர்!