உயிரிழந்த தாயுடன் கண்ணாமூச்சி விளையாடும் குழந்தை! - குழந்தைக்கும் தாய்க்கும் பாச போராட்டம்
குஜராத் மாநிலத்திலிருந்து பிகாருக்கு சிறப்பு ரயிலில் வந்த குடிபெயர் பெண் தொழிலாளி ஒருவர் போதிய உணவு கிடைக்காததால் ரயிலிலேயே உயிர் நீத்திருக்கிறார். அவரின் உடலை வாங்க யாரும் முன் வராததால், முசாபர்பூர் ரயில் நிலையத்தில் போர்வையால் மூடியபடி அவரது உடல் கேட்பாரற்று கிடந்துள்ளது. யாரும் கண்டுகொள்ளாத அந்த உடலை, அவரது குழந்தை எழுப்ப முயற்சித்து வழக்கம் போல விளையாடுகிறது. தன் தாய் உயிரிழந்ததைக் கூட அறிந்து கொள்ளாமல், போர்வைக்குள் நுழைந்து அரவணைப்பைக் கோருகிறது. உயிரிழந்தாலும் தாய்க்கு நிகர் தாய்தானே. அம்மா என்ற சொல்லில் இருக்கும் பேரின்பத்திற்கு வரையறை கிடையாது.