இமாச்சல பிரதேச மலைகளில் பனிச்சரிவு - இமாச்சல் பனிச்சரிவு
இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஜனவரி 3ஆம் தேதியில் இருந்து இன்றுவரை கடும் பனிப்பொழிவு தொடர்ந்துவருகிறது. அங்குள்ள முக்கிய சாலைகள் உறைபனியால் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துவருகின்றனர். தற்போது பனிமலைப் பகுதிகளில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. பனிச்சரிவினால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும், ஆப்பிள் மரங்கள் கடுமையான சேதமடைந்தன. மாநிலத்தின் மையத்தில் உள்ள மலைகள் மற்றும் உயரமான மலைகளில் ஜனவரி 8ஆம் தேதி மழை, பனிச்சரிவு இரண்டும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.