காண்போரைக் கவரும் கலைநயமிக்க சுவர்கள்! - Color paintings that reflect art and culture
பசுமைக்கு பெயர்போன மலநாட்டில், ஸ்மார்ட் சிட்டி உருவாகத் தடையாக இருந்தது அந்நகரின் காம்பவுன்ட் சுவர்கள்தான். அங்குள்ள காம்புவன்ட் சுவர்கள் போஸ்டர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு நகரின் அழகையே கெடுத்துவந்தது. அதை சீரமைக்கும் விதமாக, ஷிவமோகா மாநகராட்சி அந்தக் காம்பவுன்டு சுவர்கள் வழியாக கலை, கலாச்சாரத்தை மக்களின் பார்வைக்கு கொண்டுவரும் விதத்தில் வண்ண வண்ண சுவரோவியங்களை வரைந்து காண்போரைக் கவர்ந்துவருகிறது. காவல்துறை, வனத்துறை, தூய்மை இந்தியா உள்ளிட்ட அரசின் துறைகள் தொடர்பான கருதுகோள்கள் சுவரில் ஓவியங்களாக வரையப்படுகின்றன. இதைக் கண்டுகளிக்கும் அனைவரும் ஷிவமோகா மக்கள் மாநகராட்சி நிர்வாத்தை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.