மக்களவையில் மத்திய அமைச்சருக்கும் திமுக எம்.பி.க்கும் வாக்குவாதம் - Parliament live updates
டெல்லி: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கணேசமூர்த்தி அந்நிய நேரடி முதலீடு குறித்து இன்று(பிப்.9) தமிழில் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், கேள்வியின் முதல்பகுதியை தவறவிட்டதாகவும், திரும்பவும் கேட்குமாறு தெரிவிக்கிறார். இதற்கு கணேசமூர்த்தி நான் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினால், ஆங்கிலத்திலேயே பதில் அளிக்க வேண்டும், இந்தியில் கூடாது என்கிறார். இதற்கு பியூஷ்கோயல், எந்த மொழியில் கேள்வி கேட்கப்படுகிறதோ அதே மொழியில் பதில் அளிக்க விதி உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். இதனால் சற்று சலசலப்பு நீடித்தது.
Last Updated : Feb 9, 2022, 9:06 PM IST