'சந்திரயான் 2' விண்கலத்திற்கும் நாமக்கல் மண்ணுக்கும் என்ன தொடர்பு! - இஸ்ரோ
'சந்திரயான் 2' விண்கலத்துக்கும் நாமக்கல் மாவட்ட சித்தம்பூண்டி, குன்னமலை பகுதி பாறைகளுக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பகுதியிலுள்ள அனார்த்தசைட் பாறைகளை உடைத்து அதிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணில் அமைக்கப்பட்ட ஆய்வுப் படுகையில்தான் 'சந்திரயான் 2' விண்கலத்தின் லேண்டர், ரோவர் ஆகியவற்றின் ஓடும் திறன் சோதிக்கப்பட்டுள்ளது.