வைரலாகும் ராணுவ வீரர்களின் கர்பா நடனம்! - Anand Mahindra Shares Video of Army Men Playing Garba dance
நவராத்திரி விழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியில் கர்பா நடனம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அழகான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் இந்திய ராணுவ வீரர்களின் ஒரு குழு இரண்டு வரிசைகளாக நின்று கர்பா நடனமாடும் காட்சியாகும். அத்துடன் இந்த வீடியோ இன்று இணையத்தில் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்றாகும் எனவும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
TAGGED:
ராணுவ வீரர்களின் கர்பா நடனம்