பயணியின் உயிரை பாய்ந்து காப்பாற்றிய ரயில்வே போலீஸ்! - ரயில்வே போலீஸ்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை போரிவலி ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்கும்போது தவறி நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். அவரை அங்குப் பாதுகாப்பு பணியில் நின்றிருந்த ரயில்வே காவலர் ஒருவர் பாய்ந்து சென்று காப்பாற்றினார். இந்தக் காணொலி காட்சி தற்போது வைரலாகிவருகிறது.