உயிர் காப்பதே என் கடமை - மருத்துவர் சிசிர் குமார் சாகு - சிசிர் குமார் சாகு
மருத்துவர் சிசிர் குமார் சாகு தனது ஆசிரியரின் பொன்மொழிகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் சோர்வாக உணரவில்லை. இந்தச் சமூகத்துக்குத் தன்னலமற்ற விலையில்லா மருத்துவச் சேவையை அளிக்கிறார். பிணி போக்கும் அக்கறை, அர்ப்பணிப்பு, அனுதாபம் ஆகியவை இவருக்கு நோயாளிகளின் இதயத்தில் தனி இடத்தை உருவாக்கிக்கொடுத்துள்ளது. பார்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த எழுபது வயது மருத்துவரின் சேவை அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் பெற்றுக்கொடுக்கிறது.