வண்ணமிகு பலூன் திருவிழா! - அமெரிக்காவின் அல்பக்கர்க் நகரில் வெப்பக் காற்று பலூன்கள் பறக்கவிடப்பட்டன
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பலூன் திருவிழா அமெரிக்காவின் அல்பக்கர்க் நகரில் ஒன்பது நாள்கள் நடைபெறவுள்ளது. அதன்படி நேற்று நூற்றுக்கணக்கான வெப்பக் காற்று பலூன்கள் பறக்கவிடப்பட்டன. காற்றில் மிதந்த பலூன்களை அங்கு திரண்டிருந்த பார்வையாளர்கள் உற்சாகமாகக் கண்டு ரசித்தனர். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று பல வண்ணங்களில், பல வடிவங்களில் பலூன்களை வானில் பறக்கவிட்டனர். 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பலூன் திருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட வெப்பக் காற்று பலூன்கள் பறக்கவிடப்படவுள்ளன.