சரியும் மரங்களும் வளரும் கட்டிடங்களும் - மெட்ரோ நகர் மும்பை! - மெட்ரோ நகர் மும்பை
ஏற்கனவே காற்று மாசால் அல்லோலப்படும் நகரம் மும்பை. மெட்ரோ திட்டத்துக்காக அதன் நுரையீரலாக விளங்கும் ஆரே காலனியிலுள்ள மரங்களை வெட்ட தடை விதித்தது உச்சநிதிமன்றம். ஆனால் தடைவருவதற்கு முந்தைய இரு நாட்களில் மட்டும் 2,141 மரங்கள் வெட்டப்பட்டதாக மும்பை மெட்ரோ தெரிவித்தது மக்களை அதிர்ச்சியின் உச்சத்திற்கே எடுத்துச் சென்றது.