'என் புகைப்படங்கள் எளியோருக்கானது': இது டேனிஷ் சித்திக்குக்கான அஞ்சலி - டேனிஷ் சித்திக்குக்கான அஞ்சலி
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ஒளிப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். பெரும்பாலும் மக்களின் பிரச்னைகள் சார்ந்தே இவரது ஒளிப்படங்கள் அமைந்திருக்கும். டெல்லியில் கொத்துக் கொத்தாக கரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்கள் எரியூட்டப்பட்ட புகைப்படத்தில் இருந்து ரோஹிங்கியா அகதிகள் வரை இவரது புகைப்படங்கள் பல மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளன. ஓர் எளியோருக்கான கலைஞன் கொல்லப்பட்ட நிகழ்வு வரலாற்றின் தவிர்க்கமுடியாத துன்பியல் நிகழ்வு.