கால்களில் சுற்றிக்கொண்ட பாம்பை அடித்துக்கொன்ற நபர் - telangana news
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ஜங்கபள்ளி கிராமத்தில் சாலையில் நடந்துசென்ற நபரின் கால்களை பாம்பு ஒன்று, சுற்றிவளைத்துக் கொண்டது. நீண்ட நேரமாகப் பாம்பிடமிருந்து விடுபட முயன்ற அவர், மற்றொரு நபரின் உதவியுடன், பாம்பின் தலையைப் பிடித்துவிட்டார். பாம்பின் தலையைத் திருப்ப முயற்சித்தது தோல்வியில் முடிந்தது. இருப்பினும், பாம்பைத் தரையில் விட்ட அந்நபர், குச்சியைக் கொண்டு பலமாகத் தாக்கியதில் படுகாயமடைந்து உயிரிழந்தது. இந்தக் காணொலி சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டுவருகிறது.