மதங்களை கடந்த சுடுகாடு! - மதங்களை கடந்த சுடுகாடு
அஸ்ஸாம் ஜோர்கட் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சுடுகாடு மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. கிட்டத்தட்ட நூற்றாண்டு காலமாக, இந்துக்கள் தகன பூமியாகவும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கல்லறையாகவும் பயன்படுத்தி வருவதே இதன் தனித்துவம். நாடு முழுக்க நாளுக்கு நாள் மத சகிப்பின்மை அதிகரித்துவரும் நிலையில், சமய நல்லிணக்கத்துக்கு உதாரணமாய் விளங்கும் இந்த இடுகாடு ஜோர்கட்டிலிருந்து 44 கிமீ தொலைவில் போர்ஹோலா அருகிலிலுள்ள திதாபர் தாலுகா கோரஜன் பகுதியில் அமைந்துள்ளது.