இரண்டாம் தலைமுறை நடத்தும் தேநீர் கடை - tamil special packages
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு வெளியே 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது ஒரு தேநீர் கடை. சுர்ஜித் சிங் மற்றும் சுக்தேவ் சிங் ஆகிய இரு சகோதரர்களால், வேளாண் பல்கலைக்கழகத்திற்கு வெளியே சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது இந்த தேநீர் கடை. தற்போது அந்தத் தேநீர் கடை இரண்டாம் தலைமுறையினரால் நடத்தப்படுகிறது.