பாடகர் எஸ்பிபிக்கு சாக்லேட் சிலை! - பாடகர் எஸ்பிபி-க்கு சாக்லேட் சிலை
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவைப் போற்றும் வகையில் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள சாக்லெட் பேக்கரியில் எஸ்பிபியின் சாக்லேட் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 339 கிலோ சாக்லேட்டைக் கொண்டு 5.8 அடி உயரத்தில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் செஃப் ராஜேந்திரன் என்பவர் சுமார் 161 மணி நேரம் செலவிட்டு எஸ்பிபியின் உருவத்தை தத்ரூபமாக உருவாக்கியுள்ளார். சாக்லேட் பிரியர்களையும், பொதுமக்களையும் இது வெகுவாக கவர்ந்து வருகிறது.