மண்ணில்லாமல் தேங்காய் நார்களில் விளையும் காய்கறிகள்! - மாடித்தோட்டம்
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்தவரான வேளாண் ஆராய்ச்சி அறிஞரான சுப்ராத் மொஹந்தி (Subrat Mohanty) தனது வீட்டு மாடியில், சிறிய வனம் போலான தோட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில், தினமும் குறைவில்லாமல் காய்கறிகளை அறுவடை செய்து வருகிறார். நகரங்களின் கட்டடங்களில் மண்ணில்லாமல் காளான் வளர்ப்பதை கேள்விப்பட்டிருப்போம். கொஞ்சம் வித்தியாசமாக சுப்ராத், ‘நீரியல் வளர்ப்பு’ முறையைப் பயன்படுத்தி, தேங்காய் நார்கள் மூலம் உயிரூட்டி தோட்டம் வளர்த்து வருகிறார். அதுகுறித்த சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.