பாம்புகளின் பாதுகாப்புக்காக 30 ஆண்டுகளுக்கு மேல் பயணிக்கும் மனிதர் - பாம்புகள்
பாம்புகள், கரடிகள் என்றால் பலரும் அஞ்சி நடுங்குவார்கள். ஆனால், கர்நாடக மாநிலம் இங்கலாகி கிராமத்தை சேர்ந்த வேணுகோபால், 30 ஆண்டுகளாக பாம்புகளையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பதையே தன் கடமையாக கொண்டுள்ளார். சில நேரங்களில் வேணுகோபாலை பாம்புகள் சீண்டியிருக்கின்றன. ஆனாலும் தன் சுயநலமற்ற பணியை அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.