அமிர்தசரஸ் பொற்கோயிலில் புத்தாண்டு கொண்டாட்டம்: கரோனா நீங்க சிறப்பு பிரார்த்தனை! - வண்ணமயமாய் காட்சியளித்த பொற்கோயில்
கரோனா பெருந்தொற்றுவுக்கு மத்தியில் வெளிமாநிலங்களில் 2021ஆம் ஆண்டை வரவேற்று புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ஹர்மந்திர் சாஹிப் பொற்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வண்ணமயமாய் காட்சியளித்த பொற்கோயிலில் எங்கும் பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடும் குளிரிலும் மக்கள் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். கரோனா விட்டு நீங்கி எல்லா மக்களும் நலமுடன் வாழ பிரார்த்தனை நடைபெற்றது.