கர்நாடகாவில் வீட்டிற்குள் இருந்த 14 அடி நீள ராஜ நாகப்பாம்பு - 14 அடி நீள ராஜ நாகப்பாம்பு
கர்நாடக மாநிலத்தில் பெல்தங்கடி என்னும் நகரில் கோபாலகிருஷ்ண பட் என்பவரது வீட்டின் குளியலறையில் பதினான்கு அடி நீளமுள்ள ராஜ நாகப்பாம்பு இருந்தது. பாம்பைக் கண்டதும் அவர், பாம்பு பிடி நிபுணர் அசோக் என்பவருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, அசோக் ராஜ நாகப்பாம்பை நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு பிடித்து, பின்னர் அதை வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டார்.