20 நாள்களில் ரூ. 93.18 லட்சம் காணிக்கை...! - பண்ணாரி அம்மம் கோயில் உண்டியல் காணிக்கை
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் விழா மார்ச் 14ஆம் தேதி தொடங்கி , மார்ச் 22ஆம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், லட்சகணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். மேலும் 20 இடங்களில் பக்தர்களுக்காக வைக்கபட்டிருந்த் உண்டியலில், பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். இந்நிலையில், நேற்று (மார்ச் 24) உண்டியல் எண்ணப்பட்டது. அதில், 93 லட்சத்து 18 ஆயிரத்து 797 ரூபாயும், 368 கிராம் தங்கமும், 874 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST