நீலகிரி ராணுவ மையத்தில் குதிரை சாகசப் போட்டி - 50 மேற்பட்ட ராணுவ வீரர் மற்றும் வீராங்கனைகள்
வெலிங்டன் ராணுவ மையத்தில் உள்ள ஜிம்கானாவில் ஆண்டுதோறும் குதிரை சாகசப் போட்டிகள் நடைபெறும். இந்தாண்டுக்கான மவுண்டன் ஜிம்கானா என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்றன. இதில் 50 மேற்பட்ட ராணுவ வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர் இதில் ஷோ ஜம்பிங், ரிலே, டெண்ட் பெக்கிங், பாய்ண்ட் டூ பாய்ண்ட் ரேஸ் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. போட்டிகளில் 50 ராணுவவீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.ராணுவ பயிற்சி கல்லூரி அதிகாரிகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர், குதிரையில் இருந்தபடியே வீரர்கள் சாகசங்கள் செய்து காட்டி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST