திமுக செயற்கையான வெற்றி பெற்றுள்ளது - முன்னாள் அமைச்சர் தங்கமணி - நாமக்கல்லில் அதிமுக போராட்டம்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி, "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி செயற்கையானது. கள்ள ஓட்டு போட்டு வென்றுள்ளனர். செந்தில்பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்களால் கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெறவில்லை" என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST