Video:கால்வாயில் பிடிபட்ட மலைப்பாம்பு - போலீஸ் ஸ்டேஷனுக்கு தூக்கிச் சென்றதால் பரபரப்பு! - கோட்டயத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கடுத்துருத்தி பகுதி கால்வாயில் தூர்வாரும் பணி நேற்று (மார்ச் 29) நடைபெற்றுள்ளது. அந்தப் பணியின் போது, மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டது. அத்துடன் 15 பாம்பு முட்டைகளும் கைப்பற்றப்பட்டதால், வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் காத்திருந்தும் வனத்துறையினர் வராத காரணத்தால், விரக்தியடைந்த மக்கள் மலைப்பாம்பை பிளாஸ்டிக் பையில் போட்டு, அருகில் இருந்த காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். பாம்பைக் கண்ட காவலர்கள் அதிர்ச்சியடைந்து, பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நான்கு மணிநேர காத்திருப்புக்குப்பின் வனத்துறையினர் வந்து மலைப்பாம்பை கைப்பற்றிய பின்னர்தான், மக்கள் காவல் நிலையத்தில் இருந்து கிளம்பினர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST