அய்யோ அதியசத்த பாருங்களேன்!.. தினமும் கோயிலில் மணி அடிக்கும் ஆட்டுக்குட்டி! - தினமும் கோயிலில் மணி அடிக்கும் அதிசய ஆடு
நெல்லை: களக்காடில் மணிகண்டன் மெஸ் அருகில் தோப்பு தெரு அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடு ஒன்று தினமும் வந்து வாசலிலே மணியடிக்கும் அதிசய செயல் நடந்து வருகிறது. காலம் செல்லும் வேகத்தில் கடவுளை பைக்கில் போகும் போதும், பஸ்ஸில் போகும் போதும் கோயில் அருகே கடந்து செல்லும் பக்தர்கள் கன்னத்தில் போட்டுக்கொண்டு செல்லும் நிலை உள்ள சூழ்நிலையில் ஆடு ஒன்றிற்கு ஏற்பட்டுள்ள கடவுள் பக்தி நம்மை பிரம்மிக்க வைக்கிறது. தினமும் தவறாமல் கோயிலுக்கு வரும் ஒரு ஆடு சுமார் 10 நிமிடம் மணி அடித்து விட்டு செல்கிறது. இதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST