Watch: அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடிப்பு - புனேயில் பயங்கரம் - புனேயில் சிலிண்டர்கள் வெடிப்பு
புனேயில் கத்ராஜ் பகுதியில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் குடோன் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடோனில் இருந்த 8 முதல் 10 சிலிண்டர்கள் வரை வெடித்ததாக கூறப்படுகிறது. மாலை 5 மணியளவில் தீயணைப்புத் துறையினருக்கு சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அழைப்பு வந்துள்ளது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது வரை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST