தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

World COPD Day 2022: உங்கள் ஆரோக்கியமான நுரையீரல் வாழ்க்கை எதிர்கால சந்ததியினரை காக்கும் - சிஓபிடி தினம்

உலகில் முழுவதும் 30 கோடி பேருக்கு நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் பாதிப்பு உள்ளது. உலகளவில் இறப்புக்கான மூன்றாவது முக்கிய நோயாக உள்ளது. இந்த நோய் வராமல் தடுக்க நாம் கடைபிடிக்க வேண்டியவை குறித்து காண்போம்.

"Your Lungs for Life": World COPD Day 2022
"Your Lungs for Life": World COPD Day 2022

By

Published : Nov 16, 2022, 12:00 AM IST

ஹைதராபாத்: உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம் (COPD) இன்று (நவம்பர் 16) கடைப்பிடிக்கப்படுகிறது. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கவும் சிஓபிடி பயன்படுகிறது. உலகம் முழுவதும் நுரையீரல் அடைப்பு நோயால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்துவருகிறது. பருவ காலம் முதலே நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது எதிர்கால ஆரோக்கியத்திற்கு மிக அவசியமானதாகும். பொதுவாக நுரையீரல் துய காற்றை உள்ளே இழுத்து தீய காற்றை வெளியேற்றுகிறது. இது உடல் ஆரோகியத்திற்கு மிக முக்கிமானதாகும். இந்த செயல்பாடானது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் முற்றிலும் மாறுபட்டுவிடும். அதாவது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாசக் குழாய்களில் அடைப்பு ஏற்படும். நுரையீரல் சுருங்கி விரிவடையும் தன்மை பாதிக்கப்படும். இந்த நோய் பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு ஏற்படுகிறது.

அதுவும் புகைப் பிடித்தல், மாசு காற்றை தொடர்ந்து சுவாசித்தல் உள்ளிட்டவையால் ஏற்படுகிறது. அதோபோல சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்ட பகுதியில் வசித்தல், அடுப்புகள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் உடனான நெருங்கிய தொடர்புடைய பணிகளிலேயே அல்லது அதனருகிலே வசித்தலாலேயோ இந்த நோய் ஏற்படுகிறது. இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களில் மோசமான காற்றின் தரம் காரணமாக நுரையீரல் அடைப்பு நோய் பதிவாகிறது. அதேபோல வீட்டில் பயன்படுத்தப்படும் கொசு விரட்டி சுருள்கள், புகைப்பிடித்தல், விறகு அடுப்புகள் அருகில் இருந்தல் உள்ளிட்டவையாலும் நுரையீரல் அடைப்பு நோய் பதிவாகிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம், சுவாசிப்பதில் சிரமம், தொடர் இருமல், தொண்டை நோய்த்தொற்றுகள், சோர்வு, எடை குறைவு, கால்கள், பாதங்கள் மற்றும் கணுக்கால் வீக்கம் உள்ளிட்ட ஆஸ்துமா அறிகுறிகள் இருக்கும். பல்வேறு நாடுகளில் குழந்தை பருவத்திலேயே ஆஸ்துமா நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் மரபணுவே. அதாவது ஒருவர் தொடர்ந்து புகைப்பிடித்தல், காற்றின் தரம் குறைந்த பகுதியில் வசித்தல் உள்ளிட்டவையை எதிர்கொண்டால் அவரது சந்ததியினருக்கு நுரையீரல் அடைப்பு நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

உலகில் முழுவதும் 30 கோடி பேருக்கு நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் பாதிப்புள்ளது. குறிப்பாக இந்த நோய் உலகளவில் இறப்புக்கான மூன்றாவது முக்கிய நோயாக உள்ளது. முற்றிலுமாக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் பாதிக்கப்பட்டால் அதற்கு சிகிச்சைகள் கிடையாது. ஆனால் ஆரம்பத்திலேயே தடுக்கக்கூடிய மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய நோயாகும். ஒருவருக்கு தொடர் மூச்சுத் திணறல், சளி, இருமலை ஏற்பட்டால் அவர் உடனடியாக மருத்துவர்களை நாட வேண்டும். முதல்கட்ட நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல பின்வருவனவற்றை கடைபிடிக்க வேண்டும்.

  • புகைப்பிடிப்படை நிறுத்துதல்.
  • ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணுதல்
  • தினசரி 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்தல்.
  • யோகா போன்ற மூச்சுப்பயிற்சிகளை மேற்கொள்ளுதல்.
  • எளிதாக சுவாசிக்க உதவும் மருந்துகள் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • புகைப்பிடிப்பவர்கள் மற்றும் நுரையீரல் தொடர்பான நோயாளிகள் தங்களது குழந்தைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இதன் மூலம் நாமது உடல் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல், நமது குடும்பத்தினரும் எதிர்கால சந்ததியினரும் பாதுகாக்கப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:வாஸ்குலர் இன்சுலின் எதிர்ப்பு - ஆண்கள் பெண்களை எவ்வாறு பாதிக்கிறது?

ABOUT THE AUTHOR

...view details