கரோனா வைரஸ் (தீநுண்மி) என்னும் பெருந்தொற்று உலக நாடுகளை ஆட்கொண்டுள்ளது. இதிலிருந்து இந்தியாவும் தப்பிக்கவில்லை. நாட்டில் இதுவரை 54 ஆயிரத்து 849 பேர் உயிரிழந்தும், 29 லட்சத்து ஐந்தாயிரம் பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இதனால் நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கப்படாமலும், அலுவலங்களில் பாதி விழுக்காட்டுடன் பணி நடைபெற்றிருக்கிறது.
இவையனைத்து இணையத்தில் நடைபெறுவதால், இந்தக் கரோனா காலத்தை அதிகமாக இணையத்துடன் இணைக்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இப்படி இருக்கும்பட்சத்தில், இதில் அதிகமாக கண் தசைகள் பாதிக்கப்படுகின்றன.
இந்தப் பாதிக்கப்பட்ட கண் தசைகளை யோகா மூலம் எப்படி மீட்பது குறித்து விளக்குகிறார் அறுவை சிகிச்சை வல்லுநரும், கைவல்யாதாம் யோகா நிறுவனருமான மருத்துவர் சதிஷ் பதாக்.
கண் தசைகளை ச்சுழற்சி ஏற்படுத்தும் மூன்று யோகாக்கள்
- பிரம்மா முத்ரா
- வியாக்ர முத்ரா (சிங்கம் போஸ்)
- டிராடக்
பிரம்மா முத்ரா
கண்களுக்கும், முகத்தசைகளுக்கும் ரத்த விநியோகத்தை அதிகப்படுத்துகிறது.
யோகாவை எப்படிச் செய்வது?
- கழுத்தை மெதுவாக இடதுபக்கம் திருப்புங்கள். பின்னர் சிறிது நேரம் அப்படி இருங்கள். மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பி நேராக கழுத்தை வையுங்கள். இதேபோன்று வலது பக்கம் கழுத்தை மெதுவாகத் திருப்புங்கள், சிறிது நேரம் அப்படி இருந்துவிட்டு, மெள்ள மெள்ள இயல்புநிலைக்குத் திரும்புங்கள்.
- அடுத்ததாக கழுத்தை மெதுவாக மேல்நோக்கி தூக்கி, சில விநாடிகள் காத்திருக்கவும். பின் மீண்டு இயல்புநிலைக்கு மாறுங்கள். பின்னர் கொஞ்சம் பொறுத்து கழுத்தை கீழே நகர்த்தவும். இதில் நாடி நெஞ்சைத் தொடும் வண்ணம் சில விநாடிகள் வைத்துவிட்டு. பின் மெதுவாக இயல்புநிலைக்கு வாருங்கள்.
- பின்னர் கழுத்தை இடது பக்கமாகச் சாய்த்து, சில விநாடிகள் வைத்து, மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்புங்கள். அதேபோல் வலப்பக்கமும் செய்யவும்.
- இதையடுத்து இப்போது கடிகார முறையில் முதலில் கடிகார முள்ளைப் போன்று நேர் திசையில் கழுத்தை மெதுவாகச் சுற்றுங்கள். பின்னர் இயல்புநிலைக்கு வந்துவிட்டு, கழுத்தை ஆன்ட்டி-கிளாக் என்னும் கடிகார முள்ளின் எதிர்த்திசையில் கழுத்தைச் சுற்றி மீண்டு, இயல்புநிலைக்கு வாருங்கள்.
இந்த யோகாசனத்தை மூடிய கண்களால் மூன்று முறை செய்யவும். அமைதியான சூழலில் இந்த பிரம்மா முத்ராவை செய்யுங்கள்.
வியாக்ர முத்ரா அல்லது சிங்காசனம்: