ஹைதராபாத்:உலக தைராய்டு தினம், இன்று (மே 25) கடைபிடிக்கப்படுகிறது. மனிதர்களின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் உடலியல் மற்றும் மனவியல் மாறுபாடுகளில் தைராய்டு சுரப்பி முக்கிய பங்கு வகிக்கிறது. முதலில், தைராய்டு என்பது ஒரு சுரப்பியே. தற்போதைய சூழலில், தைராய்டு சுரப்பி என்பது ஹார்மோன் பிரச்னைகளாக உலகம் முழுவதும் கருதப்படுகிறது.
இந்த தைராய்டு சுரப்பியால், ஆண்களை விட பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த தைராய்டு சுரப்பியானது வண்ணத்துப்பூச்சியின் வடிவில் காணப்படுகிறது. கழுத்தில் உள்ள மூச்சுக்குழாயில் உள்ள இந்த தைராய்டு சுரப்பியில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது.
இதன் மூலம் உடலின் செயல்பாடுகளை மாற்றி அமைக்கவும், அதனை சீர்படுத்தவும் முடியும். இந்த நிலையில், உலக தைராய்டு தினமானது, பொதுமக்கள் இடையே தைராய்டு சுரப்பி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது. கடந்த 1965ஆம் ஆண்டில் தைராய்டு நோய் குறித்த விழிப்புணர்வுக்கு அடித்தளம் போடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய தைராய்டு கூட்டமைப்பின் ஆண்டு ஆலோசனைக் கூட்டமானது, கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்தான் தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுவது, உலகம் முழுவதும் விரிவாக்கப்பட்டது.
தைராய்டு அறிகுறிகள்:உடல் சோர்வு, உடல் குளிர், மலச்சிக்கல், வறண்ட தோல், உடல் எடை அதிகரிப்பு, முகத்தில் வீக்கம், குரலில் மாற்றம், தசை பலவீனம், தசை வலி, மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், முடி உதிர்தல், மன அழுத்தம், நினைவாற்றல் பிரச்னைகள் மற்றும் மெதுவான இதயத் துடிப்பு உள்பட பல அறிகுறிகள் தைராய்டு நோயின் அறிகுறிகள் ஆகும்.