ஹைதராபாத்: உடல் உறுப்புகள் தானம் மனிதாபிமானத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது. நீங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் எட்டு பேருக்கு வாழ்வளிக்க முடியும். அதேபோல் தோல் தானத்தின் மூலம் ஒரு நபருக்கு 50 விழுக்காடு வாழ்வு அளிக்கலாம்.
எனினும் இந்த உடல் உறுப்பு தானம் குறித்து பல்வேறு சந்தேகங்கள், அச்சங்கள் மக்களிடையே இயல்பாகவே காணப்படுகிறது.
இதற்கிடையில் ஒவ்வொரு ஆண்டும், உலகில் ஐந்து லட்சம் மக்கள் சரியான உடல் உறுப்புகள் தானம் கிடைக்காமல் உயிரிழக்கின்றனர் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
ஆகையால் யார் யார் உடல் உறுப்புகள் தானம் அளிக்கலாம் என்பது குறித்து தேசிய சுகாதார மையம் (National Health Portal- NHP) கோடிட்டு காட்டுவதை பார்க்கலாம்.
- சாதி, மதம், சமூகம் என எதையும் பொருட்படுத்தாமல் அனைவரும் உடல் உறுப்பு தானம் அளிக்கலாம்.
- உறுப்புகளை தானம் செய்வதற்கு வரையறுக்கப்பட்ட வயது என்று எதுவும் இல்லை. ஆனாலும் இது கடுமையான மருத்துவ அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டது.
- 18 வயதுக்கு உட்பட்ட மைனர் (சிறார்கள்) உடல் உறுப்பு தானம் செய்ய பெற்றோர் அல்லது பாதுகாவலர் அனுமதி பெற வேண்டும்.
- புற்றுநோய், ஹெச்.ஐ.வி., நிரீழிவு நோய், சிறுநீரக குறைபாடுகள் மற்றும் இதயப் பிரச்னைகள் மற்றும் தீராத நோயினால் அவதியுறுவோர் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தடை ஏற்படலாம்.
தானம் செய்யக்கூடிய உறுப்புகள்
இயற்கை மரணம்
- கார்னியா உள்ளிட்ட திசுக்கள்
- இதய வால்வுகள்
- தோல்
- எலும்புகள்
மூளைச் சாவு
- இதயம்
- சிறுநீரகம்
- கல்லீரல்
இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும்
- குடல்
- நுரையீரல்
- கணையம்
தற்போதைய காலக்கட்டத்தில் கைகள் கூட வெற்றிகரமாக தானமாக அளிக்கும் ஏற்பட்டுள்ளது. ஆயினும் இது பாதிக்கப்பட்ட நபரின் உடல் உறுப்புகளின் நிலையை பொருத்தது.
வாழ்க்கை நன்கொடை தானம்
ஒருவர் வாழும் போதும் இந்த உடல் உறுப்புகளை தானமாக அளிக்கலாம்.
- ஒரு சிறுநீரகம்
- ஒரு நுரையீரல்
- கல்லீரலின் ஒரு பகுதி
- கணையத்தின் ஒரு பகுதி
- குடலின் ஒரு பகுதி
உடல் உறுப்புகள் தானம் தொடர்பான மூடநம்பிக்கைகள்சில