கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச மெனோபாஸ் குழு (IMS) உலக சுகாதர மையத்துடன் சேர்ந்து அக்டோபர் மாதத்தை உலக மாதவிடாய் நிறுத்த விழிப்புணர்வு மாதமாக அறிவித்து அக்டோபர் 18ஆம் தேதியை உலக மெனோபாஸ் தினமாக நியமித்தது.
பெண்களிடையே மாதவிடாய் நிறுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களது ஆரோக்கியத்தை முன்னேறச்செய்து அவர்களை நல்வாழ்வுபடுத்துதலே இந்த நாளின் நோக்கமாகும். பெண்களின் வாழ்வில் இந்த மாதிவ்டாய் நிறுத்த கால கட்டத்தில் மாதவிடாய் சுழர்ச்சி நின்றுபோகும்.
அவர்களின் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் காலமும் இத்துடன் முடிந்துபோகும். மேலும், அவர்களின் உடல்நலத்தை இது வேறு வழிகளிலும் பாதிக்கும். எந்த ஒரு பெண்ணும் இதிலிருந்து தப்ப முடியாது.
மாதவிடாய் முழுவதுமாக நிற்பது மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலில், பெரி மெனொபாஸ்(Peri menopause) இது மாதவிடாய் நிறுத்தத்திற்கு 8 இல் இருந்து 10 வருடங்களுக்கு முன்பு இருக்கும் காலகட்டமாகும். தொடர்ந்து 12 மாதங்கள் பெண்களுக்கு மாதவிடாய் வராமல் இருந்தால் அவர்கள் மாதவிடாய் நிறுத்த கட்டத்தில் உள்ளதாக சொல்லலாம்.
இந்தக் கட்டத்திற்கு பெயர் தான் மெனோபாஸ்(Menopause), அடுத்தது இறுதியாக போஸ்ட் மெனோபாஸ்(Post menopause), இந்த காலகட்டம் பெண்கள் மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு சந்திக்கும் இன்னல்கள். அவர்கள் வாழ்வில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய எற்ற இறக்கங்கள் ஏற்படும். பிற நோய்கள் வரவும் வாய்ப்புண்டு.
மேலும், வயது முதிர்ச்சியால் பெண்களுக்கு இந்நிலை வருவது இயல்பானதே. பொதுவாக 45 வயதிற்கு மேல் பெண்களின் எஸ்ட்ரோஜென் அளவு குறைய ஆரம்பிக்கும். வளர்ந்த சில நாடுகளில் இந்தக் கட்டத்தை 51 வயதில் பெண்கள் அடைகிறார்கள்.