எடை குறைப்பு பயணத்திற்காக சர்க்கரை அல்லாத இனிப்புகளுக்கு மாறியவர்களா நீங்கள்? அப்போது உலக சுகாதார அமைப்புடைய இந்த அறிவிப்பு உங்களுக்குத் தான். சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு சர்க்கரை இல்லாத இனிப்புகளுடைய பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் முடிவுகள் ஆய்வாளர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
பல்வேறு நாடுகளில் பல ஆண்டுகளாக உடல் எடையை கட்டுப்படுத்தவும் தொற்றாத நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் (non)நான் சுகர் ஸ்வீட்னஸை பயன்படுத்திட்டு வருவதாக கண்டுபிடித்து உள்ளார்கள். இது நீண்ட காலம் பயன் அளிக்காது என்றும், ஆரோக்கியமான தேர்வாக இருக்காது என்றும் உலக சுகாதார அமைப்பான W.H.O. அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க:60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பைத் தடுக்கவல்ல வைட்டமின் D துணைப்பொருட்கள்: ஆய்வில் தகவல்
Non Sugar Sweetners(NSS) என்றால் என்ன?நான் சுகர் ஸ்வீட்னர்ஸ். அதாவது செயற்கை இனிப்புகள் வகைகளாக இந்த வகை இனிப்புகள் அறியப்படுகின்றன. இது நார்மல் சர்க்கரையில் இருந்து வேறுபட்டு தயாரிக்கப்படும் உணவுகள் மற்றும் பானங்களில் கலோரிகளை சேர்க்காமல் இனிப்பிற்காக மட்டுமே இவை பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏசுசல்பேம் பொட்டாசியம்(acesulfame k), அஸ்பார்ட்டம்(aspartame), சாக்கரின்(saccharin), சுக்கிரலோஸ்(sucralose), ஸ்டிவியா(stevia) போன்ற சில வேதிப்பொருள்கள் அடங்கியுள்ளன.
நான் சுகர் ஸ்வீட்னஸ் குறித்து W.H.O. - வழிகாட்டுதல்:உடல் எடையைக் குறைக்க NSS பயன்படாது என்று W.H.O. திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த பயன்பாடு நீண்டகாலம் உதவாது என்றும் பக்க விளைவுகளாக இரண்டாம் வகை நீரிழிவு, கார்டியோ வாஸ்குலர் நோய், ஒரு படி மேல சென்று பெரியவர்களுக்கு இறப்புகள் கூட நேரிடலாம் என்று அறிவித்துள்ளார்கள். நீரிழிவு நோயாளிகளை தவிர்த்து அனைவரும் NSS-யை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அப்படி என்று இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது. இது மட்டும் இல்லாமல், இந்த வகையான சர்க்கரைகளை நாம் தினசரி பயன்படுத்தும் சோப்பு, ஸ்கின் க்ரீம், மருந்து பொருட்களுக்கு மட்டும் பயன்படுத்துவதற்கு விதிவிலக்கு கொடுத்துள்ளனர்.
NSS -ற்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொருள்கள்:NSS பயன்பாட்டிற்கு மாற்றாக நீண்ட கால பயனுக்கு, மக்கள் செயற்கை இனிப்புகளை தவிர்த்து இயற்கையாகவே கிடைக்கக்கூடிய பழங்கள், உணவுகள் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்ளவதுனாலும், உடற்பயிற்சியை வாழ்க்கையில் இயல்பாக்கி கொள்வதுமே இதற்கான மாற்றுவழி என்று உலக சுகாதார அமைப்பினுடைய நியூட்ரீசியன் மற்றும் உணவுபாதுகாப்புத்துறை இயக்குனர் பிரான்சிஸ்கோ பிரான்கா அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:Health tips: தலைவலிக்கு அடிக்கடி மாத்திரைகள் சாப்பிடுவதால் உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயம்!`