தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

எச்சரிக்கை மக்களே! ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மூட்டுநோய்களுக்கு முக்கிய காரணமாம்! - உலக மூட்டுநோய் தினம்

இன்று உலக மூட்டுநோய் தினம். 2021 ( World Arthritis Day 2021) ஆரோக்கியமற்ற உணவு பழக்கமும், வாழ்க்கை முறையும் மூட்டுநோய்க்கு முக்கிய காரணமாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

உலக மூட்டுநோய் தினம் 2021
உலக மூட்டுநோய் தினம் 2021

By

Published : Oct 12, 2021, 10:41 PM IST

முன்பெல்லாம் மூட்டு நோய் வயதானவர்களை மட்டுமே பாதிக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் வளர்ந்து வரும் நவீன உலகில் ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், வாழ்க்கை முறை காரணமாக இளைஞர்களிடமும் மூட்டு நோய் பிரச்சனை காணப்படுகிறது.

இது ஒரு பொதுவான நோயாக இருந்தாலும், மக்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல், இதன் அறிகுறிகளை அலட்சியம் செய்வதால் பின்நாளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

மூட்டுநோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் அக்டோபர் 12 (இன்று) உலக மூட்டு நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஆராய்ச்சி சொல்வது என்ன?

இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு விரிவான கணக்கெடுப்பில், தலைநகர் டெல்லியில் மொத்த மக்கள் தொகையில் 23% பேர் பல்வேறு மூட்டுநோய் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் 18% பேர், அதே போல் பெங்களூரில் 15% மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட பல ஆராய்ச்சிகளில் ஆரோக்கியமற்ற உணவு பழக்கமும், வாழ்க்கை முறையும் முக்கிய காரணமாக இருக்கின்றன என சுட்டிக்காட்டப்படுகிறது.

மூட்டுநோய் வகைகள்

100 க்கும் மேற்பட்ட மூட்டுநோய் வகைகள் உள்ளன. மூட்டுநோயின் அறிகுறிகள் வைத்து நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC - The Centers for Disease Control and Prevention) 6 முக்கிய வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது. அதில் முதுமை மூட்டழற்சி (Osteoarthritis), ருமட்டாய்டு மூட்டுநோய் (Rheumatoid Arthritis) பெரும்பாலான மக்களுக்கு ஏற்படுகிறது.

  • முதுமை மூட்டழற்சி என்பது வயது ஆக ஆக குருத்தெலும்பு தேய்ந்து அழற்சி உண்டாவது ஆகும்.
  • ருமட்டாய்டு மூட்டுநோய், இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. நம்முடைய நோய் எதிர்ப்பு செல்களே மூட்டுப் பகுதியைத் தாக்கி வீக்கம், வலி உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
    உலக மூட்டுநோய் தினம் 2021

நோய்க்கான காரணம், சிகிச்சை

மூட்டுநோய் பிரச்னை உடலில் காயம், நோயெதிர்ப்பு மண்டலத்தின் முறையற்ற செயல்பாடு, பரம்பரை நோயாக இருப்பது, அறுவை சிகிச்சை காரணமாகவும் வரலாம்.

மூட்டுநோயின் முக்கிய அறிகுறிகள் மூட்டுகள், உடலில் வலி, வீக்கம், விறைப்பு, கை மற்றும் கால்களை அசைப்பதில் அசௌகரியம், காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவை அடங்கும். மூட்டுநோயின் வகைகளைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும்.

மூட்டுநோய் வராமல் தடுப்பது எப்படி?

சீரான உணவு முறை, ஆரோக்கியமான உணவு உட்கொள்வது மிகவும் முக்கியம். காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களை உணவு பழக்கத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இது தவிர தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ளலாம். அதிகாலையில் 20 - 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பது மூட்டுநோயிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளும் வழிகளாகும்.

இதையும் படிங்க: குழந்தைகளின் மனத்திடத்தை காக்க உதவும் காய்கறி, பழ வகைகள்!

ABOUT THE AUTHOR

...view details