இந்தியா ஒரு பன்முக கலாசாரம் கொண்ட நாடு. இங்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, உடை முதல் உணவு வரை வேறுபாடே உள்ளது. அதனால் பாலூட்டும் தாய்மார்கள் என்ன உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என பாட்டிமார்கள், தாய்மார்கள் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு எடுத்துரைக்கின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் பொதுவாக பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் சுரக்க என்ன சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர், திவ்யா குப்தா விளக்குகிறார்.
குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. அதுமட்டுமின்றி தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தும், மற்ற பிற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கொடுக்கவும் கூறுகிறது. முதல் தாய்ப்பாலின் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
- தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தை வளர்ச்சியடைகிறது;
- இதனால் குழந்தைகளுக்குத் தொற்று நோய்களிலிருந்து போராட எதிர்ப்புசக்தி உருவாகுகிறது;
- தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு கொழுப்பு, ஆஸ்துமா ஏற்படுவது குறையும்;
- தாய்ப்பால் எளிதாக செரிமானம் ஆகும் என்பதால், தாய்ப்பால் பருகும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது குறைவு.
- திடீர் இறப்பு தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படாது.
- தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின், தாது, சர்க்கரைகள் என அனைத்தும் உள்ளதால், அனைத்து வயதுகளிலும் அது குழந்தையை வளர்ச்சிக்கு ஊக்கப்படுத்தும்.
- தாய்ப்பால் தாடை, பல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- தாய்-குழந்தை உறவை நெருக்கமடையச் செய்கிறது.
- அதுமட்டுமின்றி தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், நீரிழிவு, இதய நோய் வருவதைத் தடுக்கிறது.