தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

கண்களில் பட்டாசு காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

first aid if crackers cause an eye injury: சில நாட்களில் தீபாவளி வர உள்ள நிலையில் எதிர்பாராமல் ஏற்படும் தீக்காயங்களுக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று, ஆனால் முக்கியமாக கண்களில் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

கண்களில் பட்டாசு காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
கண்களில் பட்டாசு காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 10:04 PM IST

சென்னை:ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு இல்லாத பசுமை தீபாவளி கொண்டாட்டத்தை கடைபிடிக்க சொல்லி வலியுறுத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள். ஆனால் தீபாவளியும், பட்டாசும் பிரிக்கவே முடியாது என்ற அளவுக்கு ஒன்றிப் போயுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு தீபாவளியின் போதும் பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

முன்னெச்சரிக்கை என்ன?இந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஏற்படும் விபத்துகளில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது 5 வயதில் இருந்து 15 வயதிற்கு உள்ளான குழந்தைகள் தான். 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் பெற்றோருடைய கண்காணிப்பில், அவர்களது வழிகாட்டுதலின் கீழ் பட்டாசுகளை கையாள வேண்டும்.

  • பட்டாசுகளில் உள்ள ரசாயன மருந்து பொருட்கள் கண்களில் படாமல் இருக்க பவர் இல்லாத கண்ணாடியை அணியலாம். கால்களில் நெருப்பு படாமல் இருக்க காலணிகளை அணிந்திருப்பது அவசியம்.
  • குறைந்தது பட்டாசுக்கும் அதனை வெடிப்பவர்களுக்கும் இடையில் ஒரு கை நீளம் இடைவெளி இருப்பது அவசியம். இதனால் பட்டாசால் ஏற்படும் புகை அல்லது அதன் துகள்கள் கண்களில் படாமல் இருக்கும்.
  • வெடிகளை கண்ணாடி பாட்டில்களில் வைத்து வெடிப்பதை தவிர்க்க வேண்டும். கண்ணாடி பாட்டில்கள் வெடித்து கண்களில் பட்டால் அது பெரும் ஆபத்தாக வந்து முடியும்.
  • பட்டாசுகளை வெடிக்கும் போது அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். வெடிக்கும் போது எதிர்பாராத விதமாக தீ பரவினால் உடனடியாக செயல்பட்டு தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சிக்க வேண்டும்.

பட்டாசு கண்களில் பட்டால் என்ன செய்ய வேண்டும்?

என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுவது வழக்கம் தான். அவ்வாறு பட்டாசுகளை வெடிக்கும் போது அதன் துகள்கள் கண்களில் பட்டுவிட்டால் கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

இதையும் படிங்க: தீபாவளி ஸ்பெஷல்.. சர்க்கரை வள்ளிக்கிழங்கு வெச்சு பாயாசம்… ட்ரை பண்ணி பாருங்க!

பதட்டமடையாமல் இருப்பது அவசியம்:பட்டாசால் கண்களில் பாதிப்பு ஏற்பட்டால் முடிந்தவரை அமைதியாக இருப்பது முக்கியம். பயத்தால் எடுக்கும் நடவடிக்கைகள் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும். எனவே ஆழ்ந்த மூச்சை எடுத்து அமைதியாக இருங்கள்.

  • கண்ணைத் தேய்க்காதீர்கள்:பாதிக்கப்பட்ட கண்ணைத் தொடுவதற்கு அல்லது தேய்ப்பதை தடுப்பது முக்கியம். ஏதேனும் துகள்கள் சிக்கி இருந்தால் அதனை தண்ணீர் வைத்து சுத்தம் செய்வது அவசியம். இதற்கு சுத்தமான தண்ணீரை பயன்படுத்துவது நல்லது. குழாய் நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது கண்ணை மேலும் எரிச்சலடையச் செய்யும் அசுத்தங்களைக் கொண்டிருக்கலாம்.
  • காயமடைந்த கண்ணை மூடவும்:காயமடைந்த கண்ணை சுத்தமான துணி அல்லது மென்மையான பருத்தி துணியால் மூடி பாதுகாக்கவும். இது மேலும் ஏற்படும் பாதிப்பை தடுக்கவும், பாதிக்கப்பட்ட கண்ணின் இயக்கத்தைக் குறைக்கவும் உதவும்.
  • உடனடி மருத்துவ கவனத்தை நாடுங்கள்:கண்களில் காயம் ஏற்பட்டால்உடனடியாக மருத்துவ உதவியை பெறுவது அவசியம். சிறிய காயங்கள் கூட சிகிச்சையளிக்கப்படாவிட்டால் பார்வையை பாதிக்கும். எனவே கண் நிபுணரைத் தொடர்புகொள்ளவும் அல்லது முழுமையான பரிசோதனை மற்றும் முறையான சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்.

பட்டாசு கண்களில் பட்டால் என்ன செய்யக்கூடாது?

கண் விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது, என்ன செய்யக்கூடாது என்பதைப் புரிந்துகொள்வது.

  • காயத்தைப் புறக்கணிக்காதீர்கள்:கண்களில் ஏற்படும் காயத்தை சிறியதாக நினைத்து நிராகரிக்காதீர்கள். சிறிய காயம் கூட நாளடைவில் பெரிய இன்னல்களை கொடுக்கும் வகையில் மாறிவிடும்.
  • சுய மருத்துவம் வேண்டாம்:மருத்துவர்களது வழிகாட்டுதல் இல்லாமல் கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இவை சில நேரங்களில் நிலைமையை மோசமாக்கும்.
  • துகள்களை அகற்ற முயற்சிக்காதீர்கள்:கண்களில் பட்ட துகள்களை எடுக்க முயற்சிக்கும் போது அது மேலும் சேதத்தை ஏற்படுத்தலாம். மாறாக, கண்ணை நிலையாக வைத்து, உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.

உண்மையான கொண்டாட்டம் என்பது யாரையும் தொந்தரவு செய்யாது. ஆனால் நமது கொண்டாட்டம் அப்படியா இருக்கிறது? பட்டாசுகளால் ஏற்படும் சத்தத்தில் முதியவர்கள், விலங்குகள், பறவைகள், என அனைவரும் அலரி அடித்து ஒரு மாதத்திற்கு வெளியில் எட்டிப் பார்க்காத அளவுக்கு தான் உள்ளது நம் கொண்டாட்டம். இவற்றை முடிந்த வரை தவிர்த்து மாசுபாடு இல்லாத தீபாவளியை கொண்டாடி மகிழ்வோம்.

இதையும் படிங்க: தீபாவளி இனிப்புகள் அதிக நிறமூட்டிகள் இருந்தால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத்துறை வார்னிங்!

ABOUT THE AUTHOR

...view details