நியூயார்க்:அமெரிக்காவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகளவில் இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள் மீட்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர். இவர்களிடையே போதைப்பொருள் நாட்டத்தை கட்டுப்படுத்த மாற்று மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட Xylazine என்னும் மாற்று மருந்து ஹெராயின் பயன்படுத்துவோருக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மருத்து கால்நடை மருத்துவ பயன்பாட்டிற்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை தொடர்ந்து பயன்படுத்தியவர்களில் பலர் ஜாம்பி போல நடந்துகொள்வதாக புகார்கள் எழுந்த நிலையில், அதை பயன்படுத்திய பலருக்கு தோல் அழுகத் தொடங்கி உள்ளது. இதனிடையே Xylazine மருந்தை தொடர்ந்து எடுத்துக்கொண்டவர்கள் ஜாம்பி போல நடந்துகொள்ளும் வீடியோக்களும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.