சிகாகோ:உலகில் உடல் எடையை குறைக்க ஓவ்வொரு நாளும் பல்வேறு புது புது வழிகளை ஆராய்சியாளர்கள் அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளனர். இந்த வரிசையில் தற்போது உடல் எடையை குறைக்க தண்ணீரை மட்டும் பருகி விரதம் அல்லது டயட்டினை மேற்கொள்வது அதிகளவில் உதவுகிறது என சிகாகோவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் நிருபிக்கப்பட்டுள்ளது.
உடல் எடையை குறைக்கும் தண்ணீர்: சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தில் தண்ணீர் பருகுவதன் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், விரதம் அல்லது டயட் மேற்கொள்ளும் நபர்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் குறிப்பிட்ட காலத்திற்கு தண்ணீரை மட்டும் பருகும் நபர்களை கவனித்ததில், அவர்களின் உடல் எடை வெகுவாக குறைந்துள்ளதை கண்டறிந்துள்ளனர். மேலும் இதனால் அவர்கள் வேறேதும் நோய் அபாயங்களுக்கு தள்ளப்படவில்லை என்றும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த ஆய்வின் போது மருத்துவர்களின் அறிவுரை இன்றி இந்த விரதம் அல்லது டயட்டை மேற்கொள்ளக்கூடாது எனவும் இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார்.
இது மட்டுமின்றி, இரத்த அழுத்தம், கொலாஸ்ட்ரால் போன்ற அதீத நோயாளிகளிடமும் நல்ல முன்னேற்றங்கள் இருந்துள்ளதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தண்ணீரை மட்டும் பருகி உடல் எடை குறைப்பது உடற்பயிற்சி முறையில் இருந்தாலும் இந்த ஆராய்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆராய்ச்சி குறித்து ஆய்வின் முதன்மை ஆசிரியர் கிறிஸ்டா வரடி கருத்து:இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆசிரியரும், கினிசியாலஜி மற்றும் ஊட்டச்சத்து பேராசிரியருமான கிறிஸ்டா வரடி, இந்த ஆய்வு பற்றி கூறுகையில், “உடல் எடை குறைபாட்டில் தண்ணீரின் தாக்கம் அதிகம் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வின் முடிவுகள் விளக்குகின்றன. மேலும் இந்த ஆய்விற்காக குறிப்பிட்ட சிலரை கண்காணித்தோம். அதில் தண்ணீர் மட்டும் பருகுவோர் மற்றும் குறைந்த பட்ச களோரி அளவு கொண்ட உணவுகளை எடுத்துகொள்வோர் என இரு வேறு நபர்களை கண்காணித்தோம்.