வாஷிங்டன்:கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம், வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் எலிகளை கொண்டு ஆய்வு ஒன்று நடத்தியுள்ளனர்.
வைட்டமின் D குறைபாடு உள்ள எலிகளை கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அந்த எலிகள் பெற்ற குட்டிகளுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான 100 சதவீத சாத்தியக்கூறுகள் இருந்துள்ளது. சமீப காலமாக உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி பெரியவர்கள் மட்டும் இன்றி, பிறந்த குழந்தைகளுக்கு கூட நீரிழிவு நோய் ஏற்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி என்றால் என்ன? பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்!
இந்நிலையில் கர்ப்பகாலத்தில் வைட்டமின் D குறைபாடு் உள்ள பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வர வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பேசியுள்ள, ஆய்வுக்குழுவின் தலைமை கார்லோஸ் பெர்னல் மிஸ்ராச்சி, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வைட்டமின் குறைபாடுகள் ஏற்படுவது சகஜமான ஒன்றாக இருந்தாலும் அதை முறையாக கண்டறிந்து சரி செய்துகொள்ள வேண்டியது கட்டாயம் எனக்கூறியுள்ளார்.
அதிலும் முக்கியமாக வைட்டமின் D குறைபாடு உள்ள கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவு, மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் சப்ளிமெண்டரி, இயற்கையாகவே கிடைக்கும் வைட்டமின் D சத்துக்களை எடுத்துக்கொண்டு குறைபாட்டை சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் பிறக்கும் குழந்தை நீரிழிவு நோய் உடனோ அல்லது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை உடனோ பிறக்கலாம்.