தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

பருவமழை காலத்தில் அச்சுறுத்தும் கிருமிகள் மூலம் பரவும் நோய் - பருவமழை காலம்

இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கிருமிகள் மூலம் நோய்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காண்போம்.

கிருமிகள் மூலம் பரவும் நோய்
கிருமிகள் மூலம் பரவும் நோய்

By

Published : Aug 23, 2020, 6:10 PM IST

திருவிழாவிற்கும் வேளாண்துறை சார்ந்த பணிகளுக்கும் பேர்போன மழைக்காலத்தில் கொசுக்கள் மூலம் நோய்கள் பரவுவது அதிகரிக்கும். ஆண்டுக்கு ஆண்டு, கொசுக்கள் மற்றும் கிருமிகள் மூலம் பரவும் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சில நேரங்களில் உயிர்கொல்லியாக கூட அது உருவெடுக்கிறது. பருவமழை தொங்கவுள்ள நிலையில், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மருத்துவர் ரங்கநாயக்கலு ஈடிவி பாரத்திடம் விவரிக்கிறார்.

மழைக் காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  • வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
  • கொசுக்கள் உற்பத்தி தடுக்கும் நோக்கில் பொருள்களை மூடி வைக்க வேண்டும்.
  • கொசு முட்டையை உட்கொள்ளும் கம்பூசியா மீன்களை ஏறி, குளங்கள் ஆகிய நீர்நிலைகளில் வளர்க்க வேண்டும்
  • கொசுக்களின் தாக்கம் அதிகமுள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • வெளியே செல்லும் போது, முழு உடலை மூடும் அளவிலான உடைகளை அணிய வேண்டும்.
  • உணவு பொருள்களை மூடி வைக்க வேண்டும்.
  • காய்ச்சிய நீரை குடிக்க வேண்டும்.
  • உறங்கும்போது, கொசு வலைக்களை பயன்படுத்த வேண்டும்.

பருவ மழை காலத்தில் மேற்கொள்ள வேண்டியவை

  • வீட்டு உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
  • கீரை வகை, காய் கறி வகைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
  • மீன், இறைச்சி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
  • கனிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: மயில்களுக்கு உணவளிக்கும் பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details