தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

எலக்ட்ரிக் குக்கர் மூலம் என்.95 முகக்கவசங்களை எளிதாக சுத்தப்படுத்த முடியும்: ஆய்வில் தகவல் - முகக்கவசம்

எலக்ட்ரிக் குக்கர் மூலம் என்.95 முகக்கவசங்களை எளிதாக சுத்தப்படுத்த முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

என்95 முகக்கவசம்
என்95 முகக்கவசம்

By

Published : Aug 11, 2020, 6:55 AM IST

நியூயார்க்:இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் அர்பானா-சாம்பேன் நடத்திய ஆய்வில், அரிசி குக்கர் அல்லது இன்ஸ்டன்ட் எலக்ட்ரிக் பாட் போன்ற ஒரு மின்சார குக்கரில், 50 நிமிட உலர் வெப்ப நீரை சுடவைக்கும்பொழுது என்95 முகக்கவசங்களை உள்ளேயும் வெளியேயும் தூய்மையாகிறது.

முக்கியமாக அதன் கிருமி தடுப்பு வடிகட்டுதலையும் பொருத்தத்தையும் சிதைக்காமல் இம்முறை பராமரிக்கின்றன என்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்மூலம், அதே தன்மையுடன் என்.95 முகக்கவசங்களை பலமுறை பயன்படுத்த முடியும். இம்முகக்கவசங்கள் சிறிய நுண்கிருமிகள் வரை தடுப்பதில் தனித்துவத்துடன் திகழ்கிறது. துணியினால் ஆன முகக்கவசங்களின் மூலம் அளவில் சிறிய கிருமிகளை தடுக்க இயலாது. ஆனால் துவைத்து பயன்படுத்த கூடியதாக இருக்கும்.

எலக்ட்ரிக் குக்கர் கொண்டு என்95 சுவாச முகக்கவசங்களை எளிதாக சுத்தப்படுத்த முடியும்: ஆய்வில் தகவல்

அதேபோல் என்.95 முகக்கவசங்களை சுத்தம் செய்ய இயலாது. காரணம், அதன் தன்மையான மின்னணு காந்த அமைப்புகள் சிதைந்து, பயனற்றதாக மாறிவிடும். மேலும், தற்போதைய கரோனா சுழலில் முகக்கவசங்களின் தேவையும் அதிகரித்துவருகிறது. இதனால் இம்முறை பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details