தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

மனச்சோர்விலிருந்து மீள மருத்துவரின் ஆலோசனை என்ன தெரியுமா? - மருத்துவம்

மனச்சோர்வு அடைந்த ஒருவர் எப்படி அதிலிருந்து மீள வேண்டும் என மருத்துவர் வழங்கிய ஆலோசனைகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Clinical Depression
Clinical Depression

By

Published : Aug 18, 2020, 5:56 PM IST

  • வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில், ஏதாவது காரணத்திற்காக நம் மனது சோகமாகவோ, மனத்தளர்வுடனோ, மனக்கசப்புடனோ இருக்க நேரிடும்.
  • அப்படி நம்மில் பலருக்கும் அவ்வப்பொழுது மனச்சோர்வு ஏற்படுவது இயற்கையே. இது சில மணி நேரமோ அல்லது சில தினங்களோ இருந்து விட்டு நம்மை அறியாமலேயே நீங்கி விடும். ஆனால், இந்த மனச்சோர்வு சிலருக்கு நோயாகும்.
  • அப்படி உள்ளவர்களுக்கு மனச்சோர்வுக்கான உணர்வு பல வாரங்களாகவோ அல்லது பல மாதங்களாகவோ நீடிக்கலாம். இதனால் அவர்களின் தினசரி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, அலுவலக வேலை என அவர்களின் அன்றாட வாழ்க்கை மட்டுமின்றி, ஆனந்த வாழ்க்கை சிதைந்து போகும்.
  • மனச்சோர்வு வேறு எந்த உடல் நோயையும் போல, எளிதில் கவனிக்கவோ புரிந்துகொள்ளவோ ​​முடியாது. மனச்சோர்வு அடைந்த ஒருவர் தன்னை எப்போது சோகங்களுடனே நகர்த்துவார். அதுமட்டுமின்றி, கடந்த காலத்தில் நடந்த பல சோகமான நிகழ்வுகளை எண்ணி எண்ணி வருந்துவார். அப்படி இருப்பதை நோயாக கருதாமல், மனச்சோர்வு அடைந்த நபரை பலரும் கடந்து செல்கின்றனர்.
  • அப்படி கவனிக்கப்படாமல் இருந்தால், மனச்சோர்வு அடைந்த நபர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திற்கு தள்ளப்படுகின்றனர். அதனால் இந்த மனச்சோர்வு எனும் நோயை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதனால் மனச்சோர்வு அடைந்த நபரின் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை எடுத்தெறிந்து நல்லெண்ணங்களை விதைக்க வேண்டும்.

அதற்காக நம் மனநல நிபுணர் ரஷ்மி வாத்வா சில வழிமுறைகளை நமக்கு வழங்குகிறார்.

மனச்சோர்வின் பொதுவான வகைகள்:

  1. பெரிய மனச்சோர்வுக் கோளாறு (MDD)
  2. தொடர்ச்சியான மனச்சோர்வுக் கோளாறு
  3. இருமுனை கோளாறு
  4. மாதவிடாய்க்கு முந்தைய கோளாறு
  5. மாறுபட்ட கோளாறு என வகைப்படுத்தலாம்.
  • மனச்சோர்வைக் கணக்கிடும் காரணங்கள் தற்போதுவரை காணமுடியவில்லை, கண்டுபிடிக்க முடியவில்லை என்றே சொல்லலாம். இதில் மனச்சோர்வு பல்வேறு காரணிகளால் ஏற்படுகிறது. ஒரு நபருக்கு ஒரு சூழ்நிலையைச் சமாளிக்கவும், கையாளவும் முடியாதபோது அல்லது ஒரு நபரின் தேவை, ஆசைகள் பூர்த்தி செய்யப்படாதபோது, ​​அது ஒரு சோக உணர்வை ஏற்படுத்தும்; அது தான் இந்த மனச்சோர்வு என்கிறார், மருத்துவர் ரஷ்மி.
  • மனச்சோர்வின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது, பாதிக்கப்பட்ட நபர்களைப் பொறுத்தது. அவற்றை அடையாளம் காண்பதற்கான ஒரே திறவுகோல், மனச்சோர்வு அடைந்தவரை சார்ந்தவர்கள் கண்டறிவதே. இதற்கு முன்பு இயல்பாகவும் சுறுசுறுப்பாகவும் நடந்து கொண்ட ஒரு நபர், திடீரென்று எல்லாவற்றிலும் ஆர்வத்தை இழந்து, பெரும்பாலான நேரம் சோகமாக உணருவதை நீங்கள் உணர்ந்தால், அவர் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுவே மனச்சோர்வுக்கான முதல் அறிகுறியாகும்.

சரி இந்த மனச்சோர்வுக்கு சிகிச்சை என்னதான் இருக்கிறது?

மனச்சோர்வு ஒரே இரவில் குணமடையாது; அது சில மாதங்களைக் கேட்கிறது என்கிறார், மருத்துவர் ரஷ்மி. அதுமட்டுமின்றி மனச்சோர்வு அடைந்தவர் பயிற்சி பெற்ற ஆலோசகரிடமிருந்து ஆலோசனை, மருந்து என இவ்விரண்டையும் எடுத்துக் கொண்டால் எளிதில் அதிலிருந்து மீளமுடியும்.

அதுமட்டுமின்றி மனச்சோர்வு அடைந்தவரை தற்கொலை எண்ணம் போன்ற அபாயங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள அவர்களின் உற்றாரும், சுற்றாரும், நண்பர்களும் உதவினால் மட்டுமே மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள் மீள முடியும். மேலும் மனச்சோர்வில் இருப்பவர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களை மீண்டும் நினைத்துப் பார்க்கும்போதோ... இசை கேட்கும்போதோ மிகவும் இலகுவாகிறார்கள்.

இதையும் படிங்க...கரோனாவை விரைவில் குணப்படுத்தும் சித்த மருத்துவம்

ABOUT THE AUTHOR

...view details