சென்னை:மார்டன் உடைகள் எவ்வளவு வந்தாலும் பெண்களுக்கு சேலைகள் மேல் உள்ள ஆர்வம் குறையவில்லை. காலத்துக்கு ஏற்ப சேலையிலும், அது அணியப்படும் விதத்தில் புதுமையை புகுத்துவதலே சேலையின் மேல் உள்ள ஈர்ப்பு இன்றும் அப்படியே இருக்கிறது. முக்கியமாக பெண்களுக்கு காட்டன் சேலைகள் மீது தனி கண் உண்டு. கட்டுவதற்கு எளிமையாகவும் அதே சமயம் அவர்களை கூடுதல் அழகாய் காட்டும் காட்டன் புடவைகளை தேடி தேடி வாங்குவார்கள், அப்படி பெண்கள் வைத்துக்கொள்ள கூடிய மஸ்ட் ஹாவ் காட்டன் சேலைகள் இதோ…!
சந்தேரி காட்டன் சேலை (Chanderi cotton saree): சந்தாரி வகை சேலைகள் மத்திய பிரதேச மாநில பெண்களால் அதிக அளவில் விருப்பி அணியப்படுகிறது. 6 கெஜம் கொண்ட இந்த சேலை எடை குறைவு என்பதால் பலர் இந்த சேலையை தேடி தேடி வாங்கிக்கொள்கின்றனர். நேர்த்தியான தன்மையும் நுண்ணிய ஜரி வேலைபாடுகள் கொண்ட இந்த சேலை ஆபிஸ் போன்ற ஃபார்மலான இடங்களுக்கும், கேஸ்வல் வியர்க்கும் சிறந்ததாக இருக்கும். பொதுவாக இந்த சேலையில் மயில், காயின்ஸ், ஜியோமெட்ரிக் போன்ற டிசைன்ஸ்களை கொண்டதால் மிக எளிமையாகவும் அதே வகையில் ரிச்சாகவும் தோற்றமளிக்கிறது.
காதி சேலைகள் (Khadi saree): தற்போது அனைத்து பெண்களின் கண்களும் இந்த சேலையில் தான் இருக்கிறது எனச் சொன்னால் மிகையாகாது. பழங்கால தொன்மையை எடுத்து செல்லும் வகையிலும், இயற்க்கையான வண்ணங்களால் ஆன இந்த சேலை இக்கால பெண்கள் அணியகூடியதாக உள்ளது. சிம்பிள் டிசைன்களை மட்டும் கொண்டுள்ள இந்த சேலையை பார்டிகளுக்கு அணிந்து சென்றாலும் தனியாக எடுத்துக்காட்டும். கட்டுவதற்கு எளிமையாகவும், விரைப்பான லுக் கொடுப்பதால்தான் இது பெண்களின் மஸ்ட் ஹாவ் புடவைகளில் ஒன்றாக இணைகிறது.
டண்ட் சேலை (Tant cotton saree):பெங்காலி பாரம்பரியத்தை கொண்ட இந்த சேலை மிக க்ரிஸ்ப்பாக இருப்பதாலும் விலையும் குறைவாக இருப்பதால் பலரது ப்ர்ஸ்ட் சாய்ஸாக இந்த சேலை அமைகிறது. இந்த சேலையின் சிறப்பம்சமே ப்லைனாக இருப்பதாலும் கலை நயத்துடன் பார்டர்கள் அமைக்கப்பட்டிருப்பதும் தான். தினசரி வீட்டு வேலைகள் செய்வதற்கும் மற்றும் கம்பர்டபலாக இருக்க வேண்டும் என்றால் இந்த சேலையை தைரியமாக கட்டலாம்.